புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் 6-ம்தேதி தொடங்கி 23-ம்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான 30 பேர் கொண்ட இந்திய தேர்வு அணி
கடந்த 6-ம் தேதி அறிவிக்கப்பட்டது.

சமீப காலமாக ஷேவாக்கின் ஆட்டம் சிறப்பாக இல்லாததால் அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. இதேபோல சுழற்பந்து வீரர் ஹர்பஜன், வேகப்பந்து வீரர் ஜாகீர்கான் ஆகியோரும் அணியில் இடம் பெறவில்லை.

இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய இறுதி அணி மே 4-ம் தேதி மும்பையில் தேர்வு செய்யப்படும் என்று பி.சி.சி.ஐ. இன்று அறிவித்துள்ளது.

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள 30 பேர் கொண்ட உத்தேச அணியில் இருந்து 15 வீரர்களை, சந்தீப் பட்டீல் தலைமையிலான தேசிய தேர்வுக்குழு தேர்வு செய்ய உள்ளது. 30 பேர் கொண்ட இந்திய அணி வருமாறு:-

டோனி (கேப்டன்), முரளி விஜய், ஷிகார் தவான், காம்பீர், வீராட் கோலி, யுவராஜ் சிங், ரெய்னா, ரோகித் சர்மா, மனோஜ் திவாரி, ரகானே, அம்பதி ராயுடு, உன்முக்த் சந்த், கேதர் ஜாதவ், விர்திமான் சகா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா, ஜலஜ் சக்சேனா, பர்வேஸ் ரசூல், இஷாந்த் சர்மா, புவனேஸ்வர் குமார், அசோக் திண்டா, உமேஷ் யாதவ், ஷமி அகமது, இர்பான் பதான், வினய் குமார், பிரவீண் குமார், ஐஸ்வர் பாண்டே, சித்தார்த் கவுல்.

பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, போட்டி தொடக்க நாளான ஜூன் 6-ம் தேதி தென் ஆப்பிரிக்காவுடன் லீக் ஆட்டத்தில் மோதுகிறது. அதன்பின்னர் 11-ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணியுடனும், 15-ம் தேதி பரம எதிரியான பாகிஸ்தானுடனும் மோத உள்ளது.

ஏ பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் உள்ளன. இந்த அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் போட்டியில் விளையாடும். இரு பரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top