புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கொலிவுட்டில் ரியல் ஸ்கிரீன் என்ற புதிய படநிறுவனம் தயாரிக்கும் படம் ‘திரு-புகழ்’.
இப்படத்தில் திலீப்குமார், பிரபுராஜ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள், கதாநாயகியாக திவ்யாசிங் நடிக்கிறார்.


இவர்களுடன் சீதா, நளினி, சுபலேகா, சுதாகர், சுதா, காதல் தண்டபாணி, ரியாஸ்கான், கஞ்சா கருப்பு, பாண்டு ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குனர் K.அர்ஜூன ராஜா.

இவர் ஏற்கனவே மையம் கொண்டேன், கோவலனின் காதலி என்ற படங்களை இயக்கி முடித்துள்ளார். அந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.

படம் குறித்து இயக்குனர் K.அர்ஜூன ராஜா கூறுகையில், ஒரு பெண் வயதிற்கு வருவதற்கு முன்பு வரை பெற்றோர்களின் செல்லப் பிள்ளையாக இருப்பாள், வயது வந்த பின்பு அதே பெற்றோர்களுக்கு அவள் சிறை கைதி ஆகிறாள்.

வயசு வருவதற்கு முன்பு பட்டாம்பூச்சியாக சிறகடிக்க முடிந்த அவளால் அதன் பின்னர் அவ்வாறு இருக்க முடியாமல் போகிறது.

காதல் என்னும் பெயரில் அவளுக்கு ஏற்படும் தொல்லைகள் சொல்லி மாளாது என்றும் அதுதான் படத்தின் கதை எனவும் கூறியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டி, திண்டுக்கல், கொடைக்கானல் போன்ற இடங்களில் நடைபெற்றது.

தணிக்கைக் குழுவில் திருப்புகழ் என்ற பெயர் திரு–புகழ் என்று மாற்ற சொல்லியதால் மாற்றப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு : தேவராஜ் இசை ;.K.ராம்ஜி.
பாடல்கள் : பா.விஜய்,யுகபாரதி,முத்து விஜயன்,ஜெயம்கொண்டான்.
கலை : P.A.ஆனந்த்.
எடிட்டிங் : சுரேஷ் அர்ஸ்.
நடனம் : யாசின் ,பவர் சிவா,ஸ்டைல்.
ஸ்டன்ட் : டைகர் பாபு.
தயாரிப்பு மேற்பார்வை : P.முத்தைய்யா.
தயாரிப்பு : K. பழனியம்மாள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top