புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மாப்பிள்ளை கடத்தி கொல்லப்பட்டது தொடர்பாக அவிநாசியை சேர்ந்த மணமகளிடம் துருவி துருவி போலீசார் விசாரணை நடத்தினர். கேரள & தமிழக எல்லையான மீனாட்சிபுரம் அருகே உள்ள ஞன்னியோடு கிராமத்தை சேர்ந்தவர்


அனந்தகுட்டன் (27), கட்டிட தொழிலாளி. இவரது அத்தை திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் வசிக்கிறார்.

அனந்த குட்டனுக்கும் அவரது அத்தை மகளுக்கும் மே 6ம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த 25ம் தேதி திருமண பத்திரிகையை மணமகள் வீட்டில் கொடுத்து விட்டு வருவதாக அனந்த குட்டன் சென்றார்.

அன்றிரவு 8 மணி அளவில் பாலக்காடு அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தங்கையை பார்த்து விட்டு திரும்புவதாக பெற்றோருக்கு செல்போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆனால், 26ம் தேதி காலை தாராபுரம் அருகே அனந்தகுட்டன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். சடலத்தை கைப்பற்றிய குண்டடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அனந்த குட்டன் அணிந்திருந்த தங்க மோதிரம், தங்க சங்கிலி போன்றவை அப்படியே இருந்தன. இதனால் எதற்காக கொலை நடந்தது என்பதில் குழப்பம் ஏற்பட்டது.

அவரது செல்போனை கைப்பற்றி யார், யாருடன் பேசினார் என்று பட்டியல் தயாரித்து போலீசார் துப்பு துலக்கி வந்தனர். இந்நிலையில் நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.

அப்போது, மணப்பெண்ணை 4 ஆண்டாக ஒருவர் காதலித்து தெரிய வந்தது. அதனால், காதலியின் திருமணத்தை தடுத்து நிறுத்தவே அனந்த குட்டனை கொலை செய்தார்களா என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் மணமகளிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் போலீசாருக்கு கொலையாளி பற்றிய முக்கிய துப்பு கிடைத்துள்ளது.

இதையடுத்து கட்டிட தொழிலாளி கொலை வழக்கில் விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top