தனது வீட்டின் வாசலருகே விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமிக்கு 'சாக்லேட்' கொடுப்பதாக ஆசைகாட்டி, தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்ற இருவர் அவளை மிருகத்தனமாக கற்பழித்தனர். சாந்தை இணையம்.மறுநாள் காலை, பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் அந்த சிறுமி வயல் வெளியில் மயங்கிக் கிடந்ததை அறிந்த பெற்றோர், அவளை உள்ளூர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அவளது நிலைமை மிகவும் மோசமாக இருந்ததையடுத்து, கடந்த 21ம் தேதி விமான ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, நாக்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
இதற்கிடையில், அவளை இந்த நிலைக்கு ஆளாக்கிய 2 குற்றவாளிகளை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, விசாரணைக் காவலில் அடைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த 10 நாட்களாக அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி, கோமா நிலையில் இருந்த அந்த சிறுமி நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தாள்.
0 கருத்து:
கருத்துரையிடுக