ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோனே என கனவுக்கன்னிகளுடன் ஜோடி சேர்ந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது அடுத்த படத்தில் வித்யா பாலனுடன் ஜோடி சேர உள்ளதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
எந்திரன் படத்திற்குப் பின்னர் ரஜினி நடித்துள்ள படம் கோச்சடையான். இந்தப் படத்தை ரஜினி முடித்துவிட்டார். கேன்ஸ் படவிழாவில் இந்தப் படம் திரையிடப்பட உள்ளது.
கோச்சடையான் அநேகமாக ஜூன் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரது அடுத்த படம் பற்றிய தகவல்கள் கசிந்து வருகின்றன.
புதிய படத்திற்கான கதை, இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் என அனைத்தும் முடிவாகி விட்டபோதும், கோச்சடையான் திரைக்கு வரும்வரை அது பற்றிய செய்திகளை வெளியே விடுவது நன்றாக இருக்காது என்று நினைக்கிறார் ரஜினி.
எனினும் இயக்குநர் கே.வி. ஆனந்த் என்பது போல, புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிப்பார் என்று செய்திகள் கசிந்துள்ளன.
கேன்ஸ் பட விழாவில் படங்களை தேர்வு செய்யும் 9 பேர் கொண்ட நடுவர் குழுவில் வித்யாபாலனும் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே விழாவுக்கு ரஜினியும் செல்லவிருப்பதால, அப்போது தனது படத்தில் அவரை நடிக்க வைப்பது குறித்து ரஜினி பேசி முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக