புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



மோகமுள், முகம், பாரதி, பெரியார் ஆகிய படங்களை இயக்கியவரும், ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான ஞான ராஜசேகரன், தற்போது கணித மேதை ராமானுஜர் வாழ்க்கையைப் படமாக
எடுக்கிறார்.

'ராமானுஜன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உருவாகிறது.

சாவித்திரி - ஜெமினி கணேஷன் ஆகியோரது பேரனும், விஜய சாமுண்டீஸ்வரியின் மகனுமான அபிநய், ராமானுஜன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களில் முன்னணி நடிகையாக உள்ள பாமா, ராமானுஜனின் மனைவி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ராமானுஜனின் அம்மா கதாபாத்திரத்தில் சுஹாசினியும், அப்பா கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவியும் நடிக்கிறார்கள்.

தமிழகத்தில் பிறந்து உலகப் புகழ் பெற்ற ராமானுஜரின் வாழ்க்கையை சுவைப்பட சொல்ல இருக்கும் இப்படத்தில் அப்பாஸ், சரத் பாபு, தலைவாசல் விஜய், மதன்பாப், டி.பி.கஜேந்திரன், ஏ.ஆர்.எஸ், டெல்லி குமார், டி.வி.வரதராஜன் மோகன் சர்மா மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள்.

வரும் மே மாதம் கும்பகோணத்தில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து, நாமக்கல், சென்னை, நெல்லூர், லண்டன், கேம்பிரிட்ஜ் உட்பட ராமானுஜர் வாழ்ந்த இடங்களில் நடைபெறவுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top