ஐ.பி.எல். கிரிக்கெட்டின் நேற்றைய 2-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற்றது. இப்போட்டியில் மும்பை- பஞ்சாப் அணிகள் மோதுன. டாஸ் வென்ற மும்பை
அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தெண்டுல்கரும் டிவைன் சுமித்தும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். தெண்டுல்கர் வழக்கம்போல் 9 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கார்த்திக் 25 ரன்னிலும், தொடக்க வீரர் சுமித் 33 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பின் ரோகித் சர்மாவும் பொல்லார்டும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாகவும் அதே சமயம் அடித்தும் விளையாடினார்கள்.
மும்பை அணி 19 ஓவரில் முடிவில் 147 ரன் எடுத்திருந்தது. கடைசி ஓவரை டேவிட ஹசி வீசினார். ரோகித் சர்மா முதல் பந்தில் இமாலய சிக்சர் ஒன்று விளாசினார். இரண்டாவது பந்தில் ரன் எடுக்கவில்லை. 3-வது பந்து மீண்டும் சிக்சருக்கு விரட்டினார். அடுத்த பந்தை ஒயிடாக வீசினார். 4-வது பந்தை மீண்டும் சிக்சருக்கு விளாசினார். கடைசி இரண்டு பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் மும்பை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 174 ரன் குவித்தது. கடைசி ஓவரில் மட்டும் 27 ரன்கள் எடுக்கப்பட்டது.
ரோகித் சர்மா 39 பந்தில் 79 ரன்களுடனும் (6 சிக்சர், 6 பவுண்டரி), பொல்லார்டு 21 பந்தில் 20 ரன்னுடனும் அவட்டாகாமல் இருந்தனர்.
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் மந்தீப் சிங் 9, ஷேன் மார்ஷ் 10 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் வந்த டேவிட் ஹசி 34 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மில்லர் சிற்பாக விளையாடி 56 ரன் எடுத்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் வெற்றி பெற 17 ரன் தேவைப்பட்டது. ஆனால் பஞ்சாப் அணியால் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் மும்பை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக