புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குருநாகல், பன்னல, கடுலுபொத்த பிரதேசத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் தனது காதலியின் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளார்.


இதன் பின்னர் இராணுவச் சிப்பாய் மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

இன்று (29) காலை 8.05 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண் 25 வயதானவர் எனவும் பன்னல பிரதேச சபையில் கடமையாற்றி வந்தவர் எனவும் தெரியவந்துள்ளது.

கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவச் சிப்பாய் ஒருவரே இக் கொலையுடன் தொடர்புபட்டுள்ளார்.

இராணுவச் சிப்பாய் சதங்காவ வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் குளியாப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top