அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பொண்ணொருவர் 106ஆவது வயதில் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
மர்ஜோரி ஹெம்மேர்ட் எனும் இப்பெண்ணை 73 வயதான கெவின் கிரவ்போர்ட் என்பவர் திருமணம் செய்துள்ளார்.
இவர்கள் இருவரும் மெல்பேர்ன் நகரிலுள்ள முதியோர் இல்லமொன்றில் வசிக்கின்றனர். 3 வருடங்களுக்கு முன்னர் இவர்கள் முதல் தடவையாக சந்தித்தனராம்.
106 வயதான மாஜோரிக்கு இதுவே முதலாவது திருமணமாகும். நாம் இருவரும் ஒருவருக்காக ஒருவர் அன்பினால் உருகுகிறோம்.
பழைய நண்பர்களைப் போல் நாம் பழகினோம் வயது வித்தியாசம் ஒரு பொருட்டாக இருக்கவில்லை என்கிறார் மர்ஜோரி ஹெம்மேர்ட்.
மர்ஜோரி மிக இனிமையாக பழகுபவர். உற்சாகமானவர் என்கிறார் அவரின் கணவரான கெவின் கிரவ்போர்ட்.
மர்ஜோரி முன்னர் நூலக ஊழியராக பணியாற்றியவர். அவர் தனது 96ஆவது வயதில் முதல் தடவையாக வெளிநாட்டுப் பயணமாக ஐரோப்பாவுக்கு சென்றமை குறிப்பிடத்தக்கது.