புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


யாழ்ப்பாணம், குருநகரில் அமைந்துள்ள கார்மேல் மாதா தேவாலயம் இன்று காலை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இடிந்து சேதமடைந்துள்ளது.
யாழில் காலநிலை மாற்றம் காரணமாக மழையும் இடிமின்னலும் தொடர்ந்த வண்ணமுள்ளது.

அதன் போது இன்று திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் இடியுடன் கூடிய மழை பெய்த வேளை இந்த ஆலயம் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது

அந்த ஆலயம் இடிந்து வீழ்ந்ததை அடுத்து அப்பகுதி சோகமயமாக காணப்படுகின்றது.

இந்த ஆலய முகப்பில் இருந்த கார்மேல் மாதாவின் முகம் மின்னல் காரணமாக சிதைவடைந்துள்ளது.

 மாதா கையில் ஏந்தியிருந்த பாலன் இயேசுவுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை

இந்த ஆலயத்தின் பெருவிழா எதிர்வரும் யூலை மாதம் 16ம் திகதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 
Top