இந்தியா-திருவண்ணாமலை அருகில் உள்ள கிராமத்தில் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த வாலிபரை கணவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தேவிமங்கலத்தை சேர்ந்த 25 வயது சபாஷ் கூலி தொழில் செய்துவருபவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கிரி என்பவரது மனைவி ரேணுகாவுக்கும் கடந்த 2 ஆண்டாக கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை அறிந்த கிரி சபாசை கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறால் ரேணுகா தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று இரவு சபாஷ் வீட்டிற்கு வந்த கிரியும் மற்றொரு வாலிபரும் சபாஷிடம் தகராறு செய்தனர். தகராறு முற்றிய நிலையில் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே சபாஷ் உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சபாஷின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கிரி சேத்துபட்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். கிரியுடன் வந்த மற்றொரு வாலிபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.