புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


ஃப்ரான்ஸின் தூர் (TOUR) என்ற பிராந்தியத்தைச் சேர்ந்த மகாலி தலீல் (Maglie Delile) என்ற தாய் தன் மகளுக்காக 2 ஆம் ஏப்ரல் மாதம், லெக்லர் (Leclerc) என்ற ஃப்ரன்ச் ஹைப்பர் மார்கெட்டில் சீன உணவு
வகையான நெம் (NEM) என்னும் ஒரு வகையான ரோல்ஸ் வகையை வாங்கியுள்ளார்.

மூன்று நாட்களுக்குப் பின் தன் மகளுக்கு அந்த நெம்களை, உண்ண கொடுத்திருக்கிறார், 12 வயது சிறுமி உண்ணும் போது அதனுள் இருந்த 2 செ. மீட்டர் அளவுள்ள ஒரு இரும்புத் துண்டு தொண்டைக் குழிக்குள் சென்று அடைத்துக் கொள்ள தற்போது அச்சிறுமி தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இந்த அசம்பாவிதத்தால் கவலையுற்ற அச்சிறுமியின் தாய் தூர் காவல் நிலையத்தில், முறைப்பாடு செய்திருக்கிறார். அந்த நெமை வாங்கி விற்ற லெக்லர் வியாபாரத் தளத்தின் மேல் புகார் அளிக்காமல் அதை தயாரித்து விற்ற உணவு தயாரித்தவர்கள் மேல் முறைப்பாடு அளித்துள்ளார்.

இது நாள் வரையில் லெக்லர் வியாபாரத் தளத்தின் மீது இவ் விடயத்தில் பத்திக்கைகளால் வைக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களை அதன் இயக்குனர் மறுத்துள்ளதோடு, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் குடும்பத்திற்கு இழப்பீட்டுத் தொகை தர முயற்சிகள் எடுத்து வருவதாக அறிவித்துள்ளார். அது மட்டுமன்றி லெக்லர் குழும வியாபாரத் தளங்களில் உணவு வகைகள் விற்பனையில் வந்த ஒரே பிரச்சனை இது தான் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

 
Top