தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பல்வேறு இலத்திரனியல் சாதனங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணமே இருக்கின்றன.
இவ்வாறு வெளியாகும் ஒன்றிற்கு மேற்பட்ட சாதனங்களில் சில வசதிகள் ஒரே மாதிரியாக தரப்பட்டிருக்கும். அதாவது ஆடியோ கோப்புக்களை இயக்கும் வசதியை கைப்பேசிகள், கணினிகள் போன்றவற்றில் பெற முடியும்.
எனினும் அவற்றில் பயன்படுத்தப்படும் அப்பிளிக்கேஷன்களுக்கு ஏற்றவாறு ஆடியோ கோப்பு வகைகள் காணப்படுதல் அவசியமாகும். இதனால் கோப்பு வகைகளை மாற்றியமைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன.
அவற்றுள் இலகுவானதும், விரைவானதுமான செயற்பாட்டைக் கொண்டுள்ள மென்பொருளாக Ziiosoft Music Converter காணப்படுகின்றது. இம்மென்பொருளின் உதவியுடன் MP3, WMA, M4A, MP2, AAC, AC3, AMR போன்ற பல்வேறு ஆடியோ கோப்பு வகைகளை மாற்றிக்கொள்ள முடியும்.
தரவிறக்கச் சுட்டி