உயிரிழந்ததாக வைத்தியர்களால் உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணித் தாயொருவர் சிசேரியனின் பின்னர் உயிர் மீண்ட அறிவியல் அதிசய சம்பவமொன்று குவைத்தில்
இடம்பெற்றுள்ளது. குவைத்திலுள்ள பரவேனியா வைத்தியசாலையில் கடந்த வெள்ளிக் கிழமை இச்சம்பவம் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிலிப்பினா என்ற 36 வயதான தாயே இவ்வாறு உயிருடன் அதிசயிக்கத்தக்க வகையில் மீண்டுள்ளார். குறித்த கர்ப்பிணித் தாய் உயர் இரத்த அழுத்ததினால் உயிரிழந்தாக உறுதிசெய்துள்ளனர். இதனையடுத்து சிசுவினைக் காப்பாற்றுவதற்காக சிசேரியன் மேற்கொண்டுள்ளனர். இதன்போது தாய் இறந்துவிட்டதாக நினைத்து வைத்தியர்கள் மயக்க மருந்துகள் எதுவும் பயன்படுத்தவில்லை.
தொடர்ந்து குழந்தையை பாதுகாப்பாக மீட்டுள்ளனர் வைத்தியர்கள். இதன் பின்னர் மூச்சு நின்ற தாயினைக் காப்பாற்ற இறுதியாக ஒரு தடவை முயற்சித்துப் பார்த்துள்ளனர் வைத்தியர்கள்.
இந்நிலையில் திடீரென மூச்செடுக்க ஆரம்பித்துள்ளார் உயிரிழந்தாக நம்பப்பட்ட தாய். இச்சிகிச்சையை ஹசன் என்ற வைத்தியர் மேற்கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இச்சம்பம் உண்மையில் ஒரு அறிவியல் அதிசயம்தான். தற்போது இருவரும் ஆரோக்கியமாக உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.