புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


கனடாவிலுள்ள ஒண்ட்டேரியா மருத்துவர்கள் காது கேளாதவர்களுக்கு எலும்புப்பாலம் என்ற புதிய சிகிச்சை மூலமாக நன்றாகக் காது கேட்கும்படி செய்துள்ளனர்.

எலும்புப்பாலம் என்ற சிறிய கருவியை தலைமுடிக்கு உள்ள தோலுக்கு அடியில் அறுவை சிகிச்சை செய்து பொருத்தி விட்டு பின்னர் வெளியே ஒரு சிறிய ஒலிபெருக்கியைப் பொருத்தி விட்டால் போதும்.

இந்தக் கருவி தற்பொழுது கனடாவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது. நடுக்காதிலும், வெளிகாதிலும் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த எலும்புப் பால சிகிச்சை நல்ல பலனைத் தரும்.

பழைய கருவியைப் போன்று இது பெரிதாக இருக்காது. இதை மாட்டுவதற்கு உலேகக் கொக்கியும் தேவையில்லை. உள்ளேயும், வெளியேயும் இணைக்க காந்தம் பயன்படுத்தப்படுவதால் இது ஒரு கம்பியில்லா தொழில்நுட்ப முறையாகும்.

கிட்ச்னெரிலுள்ள கிராண்ட் ரிவர் மருத்துவமனையில் 51 வயது கெல்லி டிக்சன்(Kelly Dickson) என்ற பெண்ணுக்கு இந்த எலும்புப்பால சிகிச்சை நல்ல வெற்றியைத் தந்துள்ளது.

இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சுமித் அகர்வால்(Sumit Agrawal) ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், உள்காது கேட்கவில்லை என்றால் உறுப்பு மாற்ற சிகிச்சை பலன் தரும். ஆனால் முழுக்காதும் கேட்காது என்ற பொழுது இந்த எலும்புப்பால சிகிச்சை நல்ல பலனைத் தரும்.

இந்தக் கருவியை தலைமயிருக்குள் பொருத்தப்படுவதால் வெளியே தெரியாது. மேலும் இந்த அறுவைசிகிச்சை 3000 டொலர் முதல் 5000 டொலர் வரை செலவாகும் என்று தெரிவித்துள்ளார்.
 
Top