இந்தியா-ஈரோட்டில் கள்ளக்காதலி மது அருந்த பணம் தராததால் மனமுடைந்து இளைஞர் மின் விசிரியில் தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்டார்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையை சேர்ந்தவர் கதிர்வேல்(29). தனியார் ஓட்டுநரான இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த கோவிந்தராஜன் என்பவரது மனைவி கவுசல்யாவுடன் கதிர்வேலுக்கு செல்போனில் பழக்கம் ஏற்பட்டது. இதுவே கள்ளக்காதலாகவும் மாறியது.
கவுசல்யாவை கதிர்வேல் அம்மாபேட்டைக்கு அழைத்து வந்து ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்தார். இந்த நிலையில் மது குடிக்க கள்ளக்காதலியிடம் கதிர்வேல் பணம் கேட்டார். அதற்கு அவர் குடிப்பதுக்கு எல்லாம் பணம் தர முடியாது என்று மறுத்து விட்டார். இதில் மனவேதனை அடைந்த கதிர்வேல் மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.