இந்தியா-பஞ்சாப் மாநிலத்தில் வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய சகோதரர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ரௌவால் கிராமத்தை சேர்ந்த ஒரு 17 வயது சிறுமி அவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த சகோதரர்கள் ஜோகிந்தர் சிங் மற்றும் ஸ்வரன் சிங் சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளனர்.
சகோதரர்கள் இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய போது அங்கு வந்த சிறுமியின் தாய் அதிர்ச்சியில் அலறியதை அடுத்து, அந்த இரு சகோதரர்களும் அவ்விடத்தை விட்டு வெளியேறினர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், தலைமறைவாகியுள்ள சகோதரர்களை தேடி வருகின்றனர்.
வீட்டில் தனியாக இருந்த சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவர்கள் சிறுமியின் உறவினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.