கனடாவிலுள்ள ரொடொண்டோவில் 61 வயது பெண்மணியிடம் கொள்ளை அடித்ததோடு, அவரை பாலியல் பலாத்காரமும் செய்த மர்மநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து பொலிசார் கூறுகையில், பிஞ்ச் அவெனியுவுக்கும், வெஸ்ரேன் வீதிக்கும் இடையில் கோப்பிக்கடையொன்றிற்கு வெளியே அந்த பெண் தனது காரை நிறுத்தியுள்ளார். அப்பொழுது அவரை நெருங்கிய அந்த நபர் பெண்மணியின் காருக்குள் நுழைந்திருக்கின்றார்.
காருக்குள் ஏறிய நபர் காரை அவ்விடத்திலிருந்து வெளியேறி ஜேன்வீதிக்கும், சென்.கிளெயர் அவெனியு மேற்கு வீதிக்கும் இடைப்பட்ட தனிமையான ஓரிடத்தில் நிறுத்தும்படி கூறியுள்ளார்.
மேலும் பெண்மணியிடம் பணம்,கடன் அட்டைகள் எல்லாவற்றையும் கொடுக்கும்படி மிரட்டிய பின்னர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் அந்த நபர் காரை வங்கியொன்றிற்கு ஓட்டிச் சென்று பாதிக்கப்பட்டவரின் கணக்கிலிருந்து பணத்தை எடுத்துக் கொண்டு திரும்பவும் பிஞ்ச் அவெனியு வெஸ்ரேன் வீதி பகுதிக்கு வந்து அங்கிருந்து நடந்து தப்பியோடியுள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இப்பெண் டொடொண்டோ காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்புகாரின் பெயரின் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொழுது புதன்கிழமையன்று அந்த நபரை சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.