யாழில் பாடசாலை மாணவிகளை வைத்து விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்திய விடுதி இன்று யாழ்.பிரதேச செயலகத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
இவ் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த இளைஞன் யாழில் தங்கநகை வியாபாரி ஒருவரின் மகன் எனவும் குறித்த மாணவி சுன்னாகத்தை சேர்ந்தவர் எனவும் தெரியவருகின்றது.
யாழ்.நீதிமன்ற வளாகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள போட் என்ற விடுதியிலேயே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த இளைஞன் பாடசாலை மாணவியை காரில் அழைத்து வந்து விபச்சரத்தில் ஈடுபடுத்தியமை தெரியவந்துள்ளது.
கையும் களவுமாக பிடிபட்ட மாணவியையும் குறித்த இளைஞனையும் யாழ்.பிரதேச செயலக அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.
யாழில் கலாச்சர சீரழிவுகளை ஏற்படுத்துவதைத் தடுப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பிரதேச செயலக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர் என சாந்தை இணைய யாழ் நிருபர் தெரிவித்துள்ளார்.மேலும் மேற்படி இளைஞன் பல பாடசாலை மாணவிகளை இவ்வாறு விடுதிக்கு அழைத்துச் செல்பவர் எனவும் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.