புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சீனாவில் படிக்க கட்டாயப்படுத்திய தந்தை மற்றும் அக்காவை ஆள் வைத்து சிறுவன் ஒருவன் அடித்து கொன்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சீனாவில் ஹெனான் மாகாணத்தை சேர்ந்த ஒரு சிறுவன், தன்னை படிக்க கட்டாயப்படுத்திய அவனது தந்தை காவ் டியன்பெங் மற்றும் அவனது 20 வயது அக்காவை ஆள்வைத்து அடித்து கொலை செய்துள்ளான்.

இன்டர்நெட் மூலமாக தந்தை, அக்காவை தீர்த்துக்கட்ட ஆட்களை விலைபேசிய அச்சிறுவன், அவர்களுக்கு கொலை செய்ய சரியான திட்டம் தீட்டி கொடுத்திருக்கிறான். இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், கண்காணிப்பு கேமராவில் இருவர் அந்த வீட்டிற்குள் திருட்டுத்தனமாக நுழைவது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் அச்சிறுவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கல்வியை பொறுத்தவரை சீனாவில் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுக்கு அதகமான அழுத்தத்தை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 
Top