கடந்த வருடம் சிங்கப்பூரில் இடம் பெற்ற வாகன விபத்து தொடர்பாக இலங்கையர் ஒருவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த
தகவலை ஸ்ரேய்ட் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.
நித்திரை காரணமாக இவர் வாகனத்தின் கட்டுப்பாட்டினை இழந்து வீதியில் சென்றுக் கொண்டிருந்த முதிய பெண்மணி ஒருவர் மீது மோதுண்டதில் அவர் பலியானார். இதுதவிர, மேலும் இரண்டு பாதசாரிகள் காயமடைந்தனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அவர் தொடர்பான நீதி விசாரணை இடம்பெற்ற நிலையில் தற்போது சிறைத்தண்டனை வழங்கப்பட்டதாக மேலும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.