பாகிஸ்தானின் லாகூர் நகரில் 9 மாடி அரசு கட்டிடம் ஒன்று நேற்று தீப்பற்றிக்கொண்டது. உடனே அங்கு வந்த தீயணைப்பு படையினர் கட்டிடத்தில் இருந்தவர்களை காப்பாற்றினர். ஆனால் எல்லா பகுதிகளில் இருந்தவர்களை முழுமையாக
அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.
இதனால் மற்ற தளத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தவர்களில் 5 பேர் புகை மூட்டத்தால் மூச்சுத்திணறி சாவதிலிருந்து மீள மேல் தளத்திலிருந்து கீழே குதித்தனர். அப்போது உடலில் பல்வேறு இடங்களில் முறிவு ஏற்பட்டு அவர்கள் 5 பேரும் உயிரிழந்தனர்.
மேலும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அந்த கட்டிடத்தில் இருந்த ஜெனரேட்டரிலிருந்து வந்த நெருப்பினால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக