டொரண்டோ இரவு விடுதியில் இருந்து வெளியே வந்த 22 வயது இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தலை மறைவாக இருந்த மர்ம நபரை டொரண்டோ போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி டொரண்டோவில் உள்ள இரவு விடுதியில் இருந்து வெளியே வந்து Eglinton Avenue East and Oswego Road area என்ற பகுதியில் சலையில் நடந்து வந்து கொண்டிருந்த 22 வயது இளம் பெண் ஒருவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென வழிமறித்து சாலையின் ஒதுக்கு புறத்துக்கு இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
மேலும் அந்த மர்ம நபர் பெண்ணின் பணப்பையும் திருடி சென்று விட்டதாக தெரிகிறது. தப்பிச் சென்ற குற்றவாளியை வலைவீசி தேடி வந்த டொரண்டோ போலீஸார் கடந்த வெள்ளிக்கிழமை தொலைபேசியில் குற்றவாளியின் அடையாளங்களோடு ஒருவர் நடமாடுவதை அறிந்த போலீசார் விரைந்து சென்று அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவரின் பெயர் Anthony Robertson என்றும் அவரது வயது 22 என்றும் காவல் துறையினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட குற்றவாளியை மே 21ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த குற்றவாளியால் மேலும் பலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகப்படுகின்றனர். எனவே அவரது படத்தை வெளியிட்டுள்ள போலீஸார், இந்த படத்தில் இருப்பவர் மூலம் எவரேனும் பாதிக்கப்பட்டு இருந்தால் உடனே 16-222-TIPS (8477) என்ற எண்ணிற்கு தகவல் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக