புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பொலிஸ் நிலையத்தில் வைத்து உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முயன்ற காதலர்களை காப்பாறிய பொலிஸார் அவ்விருவரையும் வைத்தியசாலையில் அனுமதித்துள்ள சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்ட இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

யாழ். நல்லூர் மற்றும் கொய்யாத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய யுவதியொருவரும் 32 வயதான இளைஞர் ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

காதலியை தன்னால் திருமணம் முடிக்க முடியாது என்று காதலன் தெரிவித்துவிட்டார். இதனையடுத்து மனமுடைந்த காதலி இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைபாடு தொடர்பில் இருவரையும் பொலிஸ் நிலையத்திற்கு இன்று புதன்கிழமை அழைத்த பொலிஸார் அவ்விருவரிடமும் தனித்தனியாக விசாரணைகளை நடத்தியுள்ளனர். காதலனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அந்த பெண் பொலிஸாரிடம் மன்றாடியுள்ளார்.

இந்நிலையில், காதலனிடம் தனியாக விசாரணை நடத்திய பொலிஸார் மனகசப்புகளை கலைந்து விட்டு காதலியை கரம்பிடிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளதுடன் இது தொடர்பில் இருவரும் கலந்தாலோசித்து முடிவொன்றை எடுக்குமாறு தனியாக அனுப்பிவைத்துள்ளனர்.

இந்நிலையிலேயே இருவரும் யாழ். பொலிஸ் நிலையத்திற்குள் வைத்தே ஒருவகையான மருந்து உட்கொண்டு உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முயற்சித்துள்ளனர்.எனினும், பொலிஸார் இவ்விருவரையும் காப்பாற்றி யாழ். போதனா வைத்தியசாலையில் உடனடியாக அனுமதித்துள்ளனர். 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top