மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி 3ஆம் குறிச்சி ஊர்வீதி மில்லத் மகளிர் வித்தியாலய வீதியில் புத்தி சுவாதீனமுற்ற மகன் ஒருவர் தாயை அடித்துத்
தாக்கியதில் தாய் பலியான சம்பவமொன்று இன்றுகாலை இடம்பெற்றுள்ளது. ஊர்வீதி மில்லத் மகளிர் மஹா வித்தியாலயத்திற்கு முன்னாலுள்ள வீதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த புத்திசுவாதீனமுற்ற மகன் தனது தாயை வீட்டில் வைத்து கடுமையாக தாக்கியதால் படுகாயமடைந்த தாயை வீட்டிற்கு அருகிலுள்ள அயலவர்கள் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே றஹ்மத்தும்மா (வயது 54) எனும் தாய் வழியில் உயிரிழந்துள்ளார்.
தாயை அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் குறித்த அவரது மகன் தற்போது பொலிஸில் சரணடைந்துள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக