உலக புகழ்பெற்ற மைக்ரோசாஃப்டின் நிறுவனரான பில்கேட்ஸின் கோரிக்கையை ஏற்று, 9 செல்வந்தர்கள் தங்களுடைய கோடிக்கணக்கான சொத்துக்களிலிருந்து குறைந்தபட்சம் பாதி மதிப்பை
ஆதரவற்றோரின் வாழ்க்கை தரம் உயர தானம் செய்ய முன்வந்துள்ளனர்.
தொழில்நுட்ப வளர்ச்சியில் சிறந்த பங்காற்றிய பில்கேட்ஸ்,'Bill and Melinda gates foundation 'என்ற அறக்கட்டளையை நடத்திவருகின்றனர். இதன் மூலம் பல ஆதரவற்றோர் மற்றும் ஏழை மக்களின் வாழ்க்கை தரம் முன்னேற பலரும் உதவி புரிந்துவருகின்றனர்.
கடந்த 2010 ஆம் ஆண்டு பில்கேட்ஸ் மற்றும் வாரன் பஃபெட் ஆகியோர் இணைந்து 'Giving Pledge' என்னும் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். உலகில் உள்ள பெரும் செல்வந்தர்களை கொடை அளிக்க ஊக்குவிக்கும் இந்த பிரசாரத்தின் விளைவாக இது வரை 114 செல்வந்தர்கள் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டு உதவ முன்வந்துள்ளனர்.
உறுதி மொழி ஏற்றவர்களிடம் இருந்து இந்த அமைப்பு பணத்தை நேரடியாக பெற்றுக்கொள்வதில்லை. மாறாக அவர்கள் வாழும் போதும் இறந்த பின்னும் அறப்பணிகளை செய்ய தார்மீக பொறுப்பை ஏற்றுக்கொள்ள செய்கிறது.
இந்த பிரசாரத்தின் மூலம் மேலும் 9 மிகப்பெரிய பணக்கார குடும்பங்களும், தனி நபர்களும் குறைந்த பட்சம் தங்களது சொத்துகளில் பாதியை நன்கொடையாக வழங்க நேற்று உறுதி மொழி அளித்திருக்கின்றனர்.
0 கருத்து:
கருத்துரையிடுக