செங்கலடி இரட்டைக் கொலை தொடர்பாக கிடைக்கப்பெற்ற தடயப் பொருட்களும் சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகளும் பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்
.
இந்த கொலை தொடர்பான சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கொலைக்குப் பயன்படுத்தியதாக நம்பப்படும் கத்தி, பொல்லுத்தடி, கோடரிப்பிடி, கையுறை, காலுறை, சந்தேக நபர்கள் அன்றைய தினம் அணிந்திருந்த ஆடைகள் என்பன நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்தத் தடயப் பொருட்களில் தோய்ந்திருந்த இரத்தம் மற்றும் சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகள் என்பனவற்றைப் பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் உத்தரவிட்டார்.
படுகொலை செய்யப்பட்டவர்கள் அன்றிரவு உட்கொண்ட உணவு மாதிரிகள் பிரேத பரிசோதனையின் போது எடுக்கப்பட்டு அவை முன்னதாக பொழும்புக்கு பகுப்பாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
அதன் பின்னர் அவர்கள் உட்கொண்ட உணவின் மீதியும் கொழுப்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்பொழுது தடயப் பொருட்களும் சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகளும் மரபணுப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவு சார்ஜன்ற் எம் நஜிமுதீன் தெரிவித்தார்.
0 கருத்து:
கருத்துரையிடுக