புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நியூசிலாந்தில் 15 வயது மற்றும் 17 வயது சிறுமிகளை கடத்தி கற்பழித்த குற்றத்திற்காக இரண்டு இந்திய வம்சாவளி ஆண்களுக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



நீயூசிலாந்தில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் பெஞ்சமின் நிலேஷ் (24) , அஷுமேந்தர பிரசாத்(27) . இவர்கள் இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு, 15 மற்றும் 17 வயது நிரம்பிய இரண்டு சிறுமிகளை கடத்தி கற்பழித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஹாமில்டன் பகுதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்த 17 வயது சிறுமி மற்றும் 15 வயது நிரம்பிய அவரது தங்கையையும் காரில் கடத்திய இவர்கள், தனிமையான இடத்திற்கு அவர்களை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த திட்டமிட்டனர்.

இவர்கள் பிடியிலிருந்து தப்பித்து போலீசுக்கு 17 வயது சிறுமி தகவல் கொடுப்பதற்குள், அவர்கள் இருவரும் 15 வயது தங்கையை 5 மணி நேரத்திற்கும் மேலாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பிறகு தப்பி ஓடினர்.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், சிறுமிகளை கடத்தி கற்பழித்த குற்றத்திற்காக நிலேஷிற்கு 16 ஆண்டுகளும், பிரசாத்திற்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அலிசா டஃப்பி தீர்ப்பளித்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top