புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


தமிழில் முன்னணி நடிகையாக இருந்த பூஜா நான் கடவுள் படத்துக்குப் பிறகு ஒரேயொரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். அதன் பிறகு அவரைப் பற்றி
வந்ததெல்லாம் யூகச் செய்திகள்.

பெங்களூருவில் செட்டிலான பூஜா, அங்கேயே வீடு கட்டி பெற்றோர்களுடன் குடியிருக்கிறார், தற்போது சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றில் வேலைக்குப் போகிறார் என ஒருசிலர் தெ‌ரிவித்தனர்.

இலங்கை சென்ற பூஜா அங்கேயே தங்கிவிட்டார். சிங்களப் படங்களில் நடித்து வருகிறார் - இது வேறு சில‌ரின் கண்டு பிடிப்பு.

ஆனால் பூஜா உண்மையில் என்ன செய்தார், ஏன் இந்த நீண்ட விடுப்பு என்பது யாருக்கும் தெ‌ரியாது. சொல்லாமல் போனது போலவே சொல்லாமல் திரும்பி வந்திருக்கிறார், படம் விடியும் முன்.

படத்தின் தலைப்புதான் கதை. நான்கு தீய மனிதர்களிடமிருந்து இரண்டு பெண்கள் தப்பியோடும் இரவில் நடப்பதுதான் விடியும் முன் படத்தின் கதை. பாலா‌ஜி கே.குமார் என்பவர் இயக்குகிறார் (படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்களைப் பார்த்தால் டப்பிங் படமோ என்றொரு சந்தேகமும் எழாமலில்லை).

எப்படியோ... பூஜா திரும்பி வந்துவிட்டார். இந்தியில் தான் இயக்கும் படத்தில் சிங்கள நடிகையை நடனம் ஆட வைத்ததற்காக பிரபுதேவாவை கண்டித்தனர். பூஜாவுக்கு மட்டும் நம்ம தமிழர்கள் எதிர்ப்பு தெ‌ரிவிக்கவில்லை. தம்பி... ஸாரி தங்கை பாசமாக இருக்குமோ?

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top