மறைந்த பாப் இசை உலகின் சாதனை பாடகர் மைக்கேல் ஜாக்சன், அவரது குழந்தைகளுக்கு தந்தை அல்ல என, லண்டன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இது குறித்து லண்டனிலிருந்து வெளிவரும், “டெய்லி ஸ்டார்´ பத்திரிகையில் கூறியுள்ளதாவது:
அமெரிக்க பாப் இசைக் கலைஞர் மைக்கேல் ஜாக்சனுக்கு, தன் குடும்பம் மிக உயர்ந்த அளவில் இருக்க வேண்டும் என்பதில், ஆழ்ந்த விருப்பம் இருந்தது. தன் குழந்தைகள் மிகவும் அறிவாளிகளாக, புத்திக்கூர்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதும் ஜாக்சனின் தீராத ஆசை.
இதனால், தன் மனைவியின் விருப்பத்துடன், அவரது கர்ப்பப் பையில், செயற்கை கருவூட்டல் மூலம், அறிவில் சிறந்த அறிஞர்களின் உயிரணுக்களை செலுத்தி, தன் குழந்தைகளை அவர் பெற்றெடுத்தார். அவர்கள் தான், பிரின்ஸ் மைக்கேல், பாரிஸ் மற்றும் பிளாங்கெட். இதில், பிரின்ஸ், பாரிஸ் ஆகியோரை, ஜாக்சனின் மனைவி டெபி ரோவே பெற்றெடுத்தார். ஆனால், பிளாங்கெட், மற்றொரு வாடகைத் தாய் மூலம் பிறந்தார்.
அந்த வாடகைத் தாய்க்கு, ஜாக்சன் தான், தன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தையாக இருக்கப்போகிறார் என்பதும் தெரியாது. இது குறித்து, பிரிட்டீஷ் நடிகர் மார்க் லெசர், 54, கூறுகையில், “”ஜாக்சனின் மூன்று குழந்தைகளுக்கும் நான் தான் தந்தை,´´ என்கிறார்.
மூன்று குழந்தைகளுக்கும், மைக்கேல் ஜாக்சன் தந்தையைப் போல் தோன்றினாலும், மருத்துவ ரீதியாக, அவரது குழந்தைகளுக்கு அவர் தந்தை அல்ல. தன் குழந்தைகள், அறிவாளிகளின் உயிரணுவிலிருந்து தான் வர வேண்டும் என்ற தீராத விருப்பமே, ஜாக்சனின் இந்த முடிவுக்கு காரணம்.
0 கருத்து:
கருத்துரையிடுக