சோனம் கபூரை குறித்து கடந்த சில நாட்களாக பல வதந்திகள். முக்கியமாக இயக்குனர் புனத் மல்கோத்ராவை காதலிக்கிறார். ஆனால் சோனத்தின் பதில் வேறாக இருக்கிறது.
பிரபல இந்தி நடிகர் அனில்கபூரின் மகள்தான் சோனம் கபூர். தனுஷின் முதல் இந்திப் படம் ரான்ஜனாவிலும் இவர்தான் ஹீரோயின். ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ் படத்தின் போது சோனமும், புனித் மல்ஹோத்ராவும் காதலில் விழுந்தார்கள் என அப்போது பேசப்பட்டது. என்ன காரணமோ அந்த பழைய கதையை பாலிவுட் இப்போது தூசி தட்டி மீண்டும் உலவவிட்டிருக்கிறது.
ஆனால் சோனம் இதனை மறுத்துள்ளார். நான் இப்போது தனியாகதான் இருக்கிறேன். யாரையும் காதலிக்கவில்லை. என்னுடைய வாழ்க்கையில் இதுவரை எந்த ஆணுக்கும் இடமிருந்ததில்லை. இப்போதைக்கு என்னுடைய அப்பா மட்டும்தான் எனக்கு முக்கியமான நபர் என தெரிவித்துள்ளார்.
சோனத்துக்கு சகோதரர்கள், ஒன்றுவிட்ட சகோதரர்கள் என மொத்தம் 6 பேர் இருக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்பில்தான் நான் இருக்கிறேன் என சோனத்தை காதலிக்கும் ஐடியாவில் இருக்கும் அனைவருக்கும் கிலி ஏற்படுத்தியிருக்கிறார் சோனம்.
ஒன்றிரண்டு பேர் என்றால் பரவாயில்லை. ஆறு பேரிடம் அடிவாங்குவது என்றால் சும்மாவா.
0 கருத்து:
கருத்துரையிடுக