ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய முதல் லீக் போட்டி மொகாலியில் மாலை 4 மணிக்கு நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிட் பீல்டிங் தேர்வு செய்தார். கடந்த சில போட்டியில் ஆடாத பஞ்சாப் அணி கேப்டன் கில்கிறிஸ்ட் இந்த போட்டியில் களம் இறங்கினார்.
அதன்படி பஞ்சாப் அணியின் மந்தீப் சிங்- கில்கிறிஸ்ட் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மந்தீப் சிங் ரன் ஏதும் எடுக்காமல் சந்திலா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து 2-வது விக்கெட்டுக்கு கில்கிறிஸ்டுடன் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், அதேசம்யம் அடித்தும் விளையாடினார்கள். இதனால் பஞ்சாப் அணியின் ஸ்கோர் ஒரு நேரத்தில் 170 ரன்களுக்கும் மேல் வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் பஞ்சாப் அணி 102 ரன்கள் இருக்கும்போது கில்கிறிஸ்ட் 42 ரன்னில் ஆட்டம் இழந்தார். மார்ஷ் சிறப்பாக விளையாடி 77 ரன் எடுத்தார்.
அதன்பின் வந்த வீரர்கள் சரியாக விளையாடாததால் பஞ்சாப் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.
146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டிராவிட்டும் ரகானேவும் களம் இறங்கினார்கள். கடந்த இரண்டு போட்டிகளில் அரை சதம் அடித்த டிராவிட் இப்போட்டியில் 4 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். அடுத்து ரகானேவுடம், அதிரடி பேட்ஸ்மேன் வாட்சன் ஜோடி சேர்ந்தார். வாட்சன் 31 ரன்கள் எடுத்த நிலையில் சாவ்லா பந்தில் கிளீன் போல்டாகி வெளியேறினார்.
அடுத்து இந்த ஐ.பி.எல். சீசனில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர் சாம்சன் ரகானேவுடன் ஜோடி சேர்ந்தார். ரகானே சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். ரகானே- சாம்சன் சிறப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி 19 ஓவரில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 147 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரகானே 59 ரன்களுடனும், சாம்சன் 47 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 13 போட்டிகளில் 9-ல் வெற்றி பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த தோல்வியின் மூலம் பஞ்சாப் அணியின் 'பிளே-ஆப்' சுற்று மங்கியுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் புள்ளிகள் விவரங்கள்(09-05-2013)
| சென்னை சூப்பர் கிங்ஸ் | 13 | 10 | 3 | 0 | 20 | +0.68 |
|
| ராஜஸ்தான் ராயல்ஸ் | 13 | 9 | 4 | 0 | 18 | +0.44 |
|
| மும்பை இந்தியன்ஸ் | 12 | 8 | 4 | 0 | 16 | +0.64 |
|
| ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் | 12 | 7 | 5 | 0 | 14 | +0.56 |
|
| சன்ரைசர்ஸ் ஹைதராபாத் | 12 | 7 | 5 | 0 | 14 | -0.22 |
|
| கிங்ஸ் XI பஞ்சாப் | 12 | 5 | 7 | 0 | 10 | -0.11 |
|
| கொல்கத்தா நைட் ரைடர்ஸ் | 12 | 4 | 8 | 0 | 8 | -0.27 |
|
| டெல்லி டேர்டெவில்ஸ் | 12 | 3 | 9 | 0 | 6 | -0.77 |
|
| புனே வாரியர்ஸ் | 12 | 2 | 10 | 0 | 4 | -1.29 |
|
0 கருத்து:
கருத்துரையிடுக