அதிக அழகாக இருப்பதனால் நாடு கடத்தப்பட்ட இளைஞனின் பேஸ்புக் பக்கம் நீக்கம்
அதிக அழகாக இருப்பதனால் நாடு கடத்தப்பட்ட ஒமர் பொர்கான் அல் காலாவின் பேஸ்புக் திடீரென நீக்கப்பட்டுள்ளது. அழகின் காரணமாக சவுதி
அரசினால் நாடு கடத்தப்பட்டதனால் உலகின் பல பாகங்களிலும் தலைப்புச் செய்தியானர் ஒமர் பொர்கான் அல் காலா.
நடிகர், கவிஞர் மற்றும் மொடல் என பல்முகம் கொண்ட ஒமர் பொர்கான் அல் காலாவின் பேஸ்புக் பக்கத்தின் லைக்குகள் சடுதியாக அதிகரித்து 790 ஆயிரத்தை எட்டியது.
இந்நிலையில் தற்போது அவரது பேஸ்புக் பக்கத்திற்கு சென்றால் Sorry this page isn’t available என்ற வாசகம் வருகிறது.
தொடர்ந்து ஒமர் பொர்கான் அல் காலா ஆரம்பித்ததாக நம்பப்படும் புதிய பேஸ்புக் கணக்கில் அவர் கருத்து வெளியிடுகையில், எனது பேஸ்புக் பக்கம் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் அது ஏன் என எனக்குத் தெரியாது? Lol எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சடுதியாக லைக்குகள் அதிகரிக்கும் பக்கங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் பின்னர் அவை சரி செய்யப்பட்டு விடுவது வழக்கம். ஆனால் இவ்விவகாரம் எவ்வாறு என்பது புரியவில்லை.
1000 கிலோகிராம் பீடி மீட்பு-
சுமார் 1000 கிலோகிராம் புகையிலை மற்றும் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த பீடி ஆகியவற்றை மாத்தளை கலால் திணைகளம் கைப்பற்றியுள்ளது.
மாத்தளை, கலேவல பீடி உற்பத்தி தொழிற்சாலையில் வைத்தே இவற்றை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த கலால் திணைக்கள அதிகாரிகள் அதன் பெறுமதி 1.5மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்ட அதிகாரிகள் உற்பத்தி நிலையத்தின் பொறுப்பாளர் உள்ளிட்ட மூவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அனுமதி பத்திரமின்றியே இந்த உற்பத்தி நிலையத்தை நடத்தி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 கருத்து:
கருத்துரையிடுக