புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மகன் செய்த தவறுக்கு பழிக்குப் பழியாக, தாயை அடித்து நிர்வாணமாக்கி, மரத்தில் கட்டி வைத்து சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.


மொபைலில் படம் பஞ்சாப் மாநிலம், ஜலாலாபாத்தை சேர்ந்தவர், மல்கீத் சிங். இவர், சில தினங்களுக்கு முன், தங்கள் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை, ஆபாசமான முறையில், மொபைலில் படம் பிடித்தார். பின் அதை, தன் <உறவினர், ஜர்னைல் சிங் உதவியுடன் இணையதளத்தில் வெளியிட்டார்.
அதிர்ச்சி அடைந்த இளம் பெண், போலீசில் புகார் செய்தார். மல்கீத் சிங் மற்றும் ஜர்னைல் சிங் கைது செய்யப்பட்டனர். ஒரு வாரம், போலீஸ் காவலில் இருந்த மல்கீத் சிங், தன் தாயார் உதவியுடன் ஜாமினில் வெளியே வந்தார்.
கடுமையாக தாக்கிஇதனால், ஆத்திரமடைந்த இளம் பெண்ணின் உறவினர்கள், கடந்த வியாழன்று இரவு, வீட்டில் தனியாக இருந்த, மல்கீத் சிங்கின் தாயை கடுமையாக தாக்கினர். அவரின் வாயில் துணியை திணித்து சப்தம் போடாமல் இருக்க செய்ததோடு, ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தினர். பின், வெளியே தூக்கி சென்று, ஊரில் பொது இடத்தில் உள்ள மரம் ஒன்றில் கட்டி வைத்து விட்டுச் சென்றனர்.
ஊர் மக்கள் அதிர்ச்சிமல்கீதின் தாய், நிர்வாண நிலையில் மரத்தில் கட்டப்பட்டிருப்பதை, காலையில் பார்த்த ஊர் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை அவிழ்த்து விட்டு, ஆடைகள் அணியச் செய்து, போலீசில் புகார் செய்தனர். வழக்கு பதிந்த போலீசார், சம்பவத்திற்கு காரணமான ஏழு பேரை தேடி வருகின்றனர்.
 
Top