புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மனைவியை நிர்வாணமாக வரைந்த கணவன் செயல் தவறு' என, மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மும்பை, சாண்டாகுரூஸ் பகுதியில் வசித்து வருபவர், சிந்தன் உபாத்யாயா. ஓவியரான இவருக்கும், இவர் மனைவிக்கும்,
ஒத்துப் போகாததால், இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர். அது குறித்த வழக்கு, பாந்த்ரா மாஜிஸ்திரேட் கோர்ட்டில்

நிலுவையில் உள்ளது. கணவன், மனைவி, ஒரே பிளாட்டில் வசித்து வந்தாலும், தனித்தனி அறைகளில் தான் தங்கி இருக்கின்றனர். வீட்டில் ஆண், பெண் வேலைக்காரர்கள் பலர் இருக்கின்றனர். பணி நிமித்தமாக, அடிக்கடி டில்லி செல்லும், சிந்தன் உபாத்யாயா, பெரும்பாலும், டில்லியிலேயே தங்கி இருப்பது வழக்கம். கணவர் சிந்தன், தான் வசிக்கும் அறைகளில், மனைவியின் நிர்வாண படங்களை வரைந்து வைத்துள்ளார். தற்செயலாக அந்தப் படங்களைப் பார்த்த வேலைக்காரர்கள், அது பற்றி சிந்தன் உபாத்யாயாவின் மனைவியிடம் தெரிவித்துள்ளனர். கோபம் கொண்ட சிந்தன் மனைவி, விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள, பாந்த்ரா மாஜிஸ்திரேட் கோர்ட்டில், புகார் செய்தார். அதை விசாரித்த கோர்ட், ஓவியர் சிந்தன் செயலை கண்டித்தது. அதை எதிர்த்து, சிந்தன், மும்பை ஐகோர்ட்டில், மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கு, நீதிபதி, எஸ்.சி.தர்மாதிகாரி முன், சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

மனைவியின் நிர்வாணப் படங்களை ஓவியமாக வரைந்துள்ள செயல், அவரின் தனிப்பட்ட சுதந்திரம் என, சிந்தன் வாதிடுவதை ஏற்பதற்கில்லை. அரசியல் அமைப்புச் சட்டம் தனக்கு அளித்த, எண்ணத்தை, கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரத்தின் அடிப்படையில் தான், ஓவியத்தை வரைந்ததாக கூறுகிறார். அவரின் தனிப்பட்ட சுதந்திரம், அவர் மனைவியின் சுதந்திரம், சுதந்திரமான செயல்பாட்டில் குறுக்கிடுகிறது.

அந்தப் பெண்ணின் நிர்வாணப் படங்களை, அவரின் தனியறையில், ரகசியமாக வரைந்து வைத்திருக்கவில்லை. வேலைக்காரர்கள் பார்க்கும் வகையிலும், பிறர் கண்களில் படும் வகையிலும், வரைந்து வைத்துள்ளார்.

இது தவறான செயல். அந்தப் பெண்ணின் அந்தரங்கங்களை, அப்பட்டமாக காட்டும் படங்களை வரைந்து, வெளிப்படையாக, அனைவரும் பார்க்கும் வகையில் செய்த, சிந்தன் உபாத்யாயாவின் செயல் கண்டனத்திற்குரியது. எனினும், இந்த உத்தரவு, அவரின் விவாகரத்து வழக்கிற்கு எந்த விதத்திலும் பொருந்தாது. விவாகரத்து வழக்கு, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் முடிவு செய்யப்படும். இவ்வாறு, நீதிபதி தர்மாதிகாரி, தன் உத்தரவில் கூறியிருந்தார்
 
Top