தற்கொலை செய்து கொள்ள, மதுவில் விஷம் கலந்து குடித்தவரிடம், "ஓசி' மது வாங்கிக் குடித்தவரும் இறந்தார். திருச்சி மாவட்டம், லால்குடி, பம்பரம்சுத்தியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 39; சொந்தமாக கார் வைத்து,
வாடகைக்கு ஓட்டி வந்தார்; மனைவியுடன் தகராறு ஏற்பட்டு, விரக்தி அடைந்தவர், நேற்று முன்தினம் இரவு, அளவுக்கு அதிகமாக, மது குடித்து போதையில் உளறிக் கொண்டிருந்தார். நேற்று காலை, மதுவில் விஷம் கலந்து குடித்து, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அப்போது, அந்த வழியாக, வாளாடி அருகே பச்சாம்பேட்டையை சேர்ந்த சம்சுதீன், 40, வந்துள்ளார். அவர், குடிபோதையில் உளறிக் கொண்டிருந்த ராமச்சந்திரன், குடித்துவிட்டு மீதி வைத்திருந்த விஷம் கலந்த மதுவை, எடுத்துக் குடித்தார்.
இதனால், மயங்கி விழுந்த அவரை, அருகில் நின்றிருந்தவர்கள், திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்; செல்லும் வழியில் இறந்தார். விஷம் கலந்த மதுவை குடித்த, ராமச்சந்திரனும், மயங்கி விழுந்து இறந்தார்.