புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மங்காத்தாவுக்கு பின்னர் த்ரிஷாவின் மார்க்கெட் சரிந்து, அவரது மவுசு இறங்கி விட்டதாக பொதுவாக பேச்சுகள் நிலவுகிறது.

ஆனால் அவரோ, எனக்கான மார்க்கெட்டும், மவுசும் இன்னமும் அப்படியே தான் உள்ளது என்கிறார்.

முன்பு நான் செல்லும் இடங்களில் என்னை எப்படி சூழ்ந்து கொண்டார்களோ அதே மாதிரி தற்போதும் நான் பொது இடத்தில் செல்வதைப்பார்த்தால் என்னை ரசிகர்கள் மொய்த்துக்கொள்கிறார்கள்.

ஆக எனக்கான கிரேஸ் கடுகளவும் குறையவில்லை என்று சொல்லி உணர்ச்சிவசப்படுகிறார் த்ரிஷா.

ஆனால் முன்னணி நாயகன்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் இல்லையே? என்றால், என்னதான் நடிகைகள் சிறப்பாக நடித்தாலும் குறிப்பிட்ட சில வருடங்களோடு அவர்களை ஓரங்கட்டி விடுவது சினிமா உலகில் தொடர்ந்து நடந்து வருகிறது.

அப்படித்தான் நானும் ஓரங்கட்டப்பட்டுள்ளேன் என்றாலும், என் திறமை மீது நம்பிக்கை வைத்து இப்போதும் நல்ல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதிலும் இரண்டு படங்களில் என்னை மையமாக வைத்தே கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆக, இப்போது நான் ஹீரோக்களுக்கு இணையான நடிகையாகி விட்டேன். அதனால் இது எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான் என்கிறார் த்ரிஷா.
 
Top