மட்டக்களப்பு, செங்கலடி நகரில் நள்ளிரவில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்கள் நான்கு பேருக்குமான விளக்கமறியல்
காலம் எதிர்வரும் 29ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டபோது நீதிபதி ஏ.எம்.எம்.றியாழ் இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார் பிரபல வர்த்தகர் சிவகுரு ரகு மற்றும் அவரது மனைவி சுந்தரமூர்த்தி விப்ரா ஆகியோர் படுக்கையறையில் கோரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இக்கொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் செங்கலடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த நான்கு மாணவர்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
செங்கலடி மத்திய கல்லூரி மாணவர்களான ரகு தக்ஷனா அவரது காதலன் சிவனேசராஜா அஜந், இவரின் நண்பர்களான புவனேந்திரன் சுமன், குமாரசிங்கம் நிலக்ஷன் ஆகிய சந்தேக நபர்கள் இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தனர்.
இவர்கள் மீதான வழக்கினை விசாரணை செய்த நீதிபதி ஏ.எம்.எம் றியாழ்; விளக்கமறியலைத் தொடர்ந்து நீடிப்பதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
இக்கொலைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பொருட்களை இரசாயணப் பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுபப்பியதற்கான அறிக்கையினை ஏறாவூர்ப் பொலிஸார் நீதிமன்றில் சமர்பித்தனர்.