மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், முன்னாள் நீதவான் ஒருவரின் மனைவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று பிற்பகல் அரசடியிலுள்ள வீட்டிலேயே இந்த
சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் குறித்த பெண்ணின் மகன் வேலை முடிந்து வீட்டுக்கு வந்துபார்த்தபோது குறித்த பெண் தூக்கில் தொங்கியுள்ளதை கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பிலான பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணையை தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பப் பிரச்சினை காரணமாக இவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தூக்கியல் தொங்கிய பெண் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் மனைவி என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.