புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

திருவண்ணாமலை: குடும்ப தகராறு காரணமாக, குழந்தையை காலால் மிதித்து, கொலை செய்ய முயன்றதுடன், மற்றொரு குழந்தையை சுவரில் அடித்து மோதிய தாய், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றது, தோல்வியில்
முடிந்தது. திருவண்ணாமலை அடுத்த, வேல் நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை, 35. இவரது மனைவி சிவசங்கரி, 30. இவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணமானது. இவர்களுக்கு, ஹரிணி, 4, லத்திகா, 3, என்ற பெண் குழந்தைகள் உண்டு.

கணவன், மனைவி இடையே, கடந்த சில மாதங்களாக, குடும்ப தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கரி, லத்திகாவின் கழுத்தில், காலால் மிதித்தார், லத்திகா பரிதாப அலறலுடன் இறந்தது. ஹரிணியை, சுவரில் ஓங்கி அடித்து விட்டு, பரபரப்பாக தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார். குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் உள்ளோர், ஏழுமலையின் வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு, உயிருக்கு போராடி கொண்டிருந்த ஹரிணியையும், சிவசங்கரியையும் மீட்டு, வேலூர், அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில், இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
Top