வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழக பெண்களை சிங்கப்பூருக்கு அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்திய சென்னை வாலிபரை சிங்கப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்தவர் கோதண்டன் வினோத் (வயது 24) இவர் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பெண்களுக்கு மாதம், 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் தருவதாகக் கூறி சிங்கப்பூருக்கு அழைத்து சென்றார். ஆனால் அங்கு வேலை எதுவும் வாங்கித் தராமல் அவர்களை வைத்து விபசார தொழில் நடத்தியுள்ளார்.
சிங்கப்பூர் போலீசார் நடத்திய சோதனையில் 21 வயதுள்ள இரு பெண்களும், 42 வயதான பெண்ணும் வினோத்துடன் கைது செய்யப்பட்டனர்.பெண்களை ஏமாற்றி அழைத்து வந்து விபாச்சாரத்தில் ஈடுபடுத்திய குற்றத்திற்காக வினோத்துக்கு ஆறு மாத சிறைத்தண்டனை வழங்கி சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.