புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மராட்டிய மாநிலம், சாகான் பகுதியைச் சேர்ந்தவர் துர்காபாய் (வயது 50). இவரது மகன் தனஞ்செய் ராஜூ (22). இவரது நண்பர் சுனில். பட்டதாரி
வாலிபர். சுனிலிடம், மந்திரவாதி ஒருவர் அஷ்டமி மற்றும் தசமி தினத்தில் 2 மனித உயிர்களை நரபலி கொடுத்தால் உன் மீது பணமழை பெய்யும் என்று கூறினார்.
இதனை நம்பிய சுனில், நரபலி கொடுக்க ஆட்களை தேடி வந்தார். இந்த நிலையில், தனது தாயின் நடத்தையில் சந்தேகம் இருப்பதால், அவரை கொலை செய்ய வேண்டுமென தனஞ்செய், சுனிலிடம் ஆலோசனை கேட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட சுனில், தனஞ்செயை தனியாக அழைத்து சென்று, துர்காபாயை கொலை செய்வது பற்றி விளக்குவது போல நடித்து, தனஞ்செயின் தலையில் இரும்புகம்பியால் அடித்து கொலை செய்தார்.
2 நாட்கள் கழித்து, துர்காபாயை கோவிலுக்கு அழைத்துச்சென்ற சுனில், அங்கு அவரை கழுத்தை அறுத்து கொலை செய்து கிணற்றில் பிணத்தை வீசி எறிந்து விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த புனே போலீசார், சந்தேகத்தின் பேரில் சுனிலை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தாய், மகன் இருவரையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சுனிலை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
 
Top