புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கேகாலை நில்மல் கொட பிரதேசத்தில் 7 வயது பாடசாலை சிறுவனை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்து டை பட்டியால் கழுத்தை நெறித்து கொலை செய்ததாகக் கூறப்படும் சந்தேக
நபரை எதிர்வரும் ஜூன் 03ம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கமாறு கேகாலை நீதிமன்ற நீதிவான் விராஜ் ரணதுங்க உத்திரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் 23ம் திகதி பாடசாலையிட்டு வீடு திரும்பாத 7 வயதுச் சிறுவனை குறித்து பெற்றோர்கள் கேகல்ல பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இம்முறைப்பாட்டையடுத்து பிரதேசவாசிகளும் பொலிஸாரும் தேடுதல் நடத்தியதையடுத்து பாழடைந்த வீடொன்றில் பாலியல் துன்புறுத்தல் புரியப்பட்டு கழுத்துப்பட்டியால் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சிறுவனின் உடலை கண்டு பிடித்தனர்.

இச்சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்த நிலையில் பொலிஸாரின் பேர்ட்டி என்ற மோப்பநாயின் உதவியுடன் சந்தேகநபரான முன்னாள் இராணுவீரர் ஒருவரை கண்டு பிடித்து கைது செய்திருந்தனர்.

பொலிஸார் சந்தேகநபரை கடந்த 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது நீதவான் மே மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

கடந்த 06 ஆம் திகதி மீன்டும் நீதிமன்ற விசாரணையின் போது சந்தேகநபர் மேலும் 6 சிறுவர்களை பாலியல் குற்றம் புரிந்ததாக தெரிவித்த பொலிஸார் சந்தேக நபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டதையடுத்து நீதிவான் சந்தேக நபரை கடந்த திங்கட்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்திரவிட்டிருந்தார்.

இதற்கமைய நேற்று முன்தினம் 20 ஆம் திகதி மீண்டும் இவ்வழக்கை நீதிவான் விசாரணைக்கு அழைத்த போது சந்தேகநபர் குறித்து விசாரணைகள் இன்னும் பூர்த்தியடையவில்லை. அதனால் நீதிவான் சந்தேகநபரை தொடர்ந்தும் ஜூன் மாதம் 03 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
 
Top