புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உத்தர பிரதேச மாநிலத்தில், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட நபர் ஒருவர், 5 வயதுக்கு உட்பட்ட தனது மூன்று
குழந்தைகளையும் கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் இருந்து 400 கி.மீ தொலைவில் இருக்கும் ராபர்ட்ஸ்கன்ஜ் பகுதியை சேர்ந்தவர் பாபுலால். இவருக்கு அண்மையில் தான் அவரது மனைவிக்கும் மற்றொரு உறவினருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து மனைவியிடம் கேட்டபோது, அவர்கள் இடையே வாக்குவாதம் அதிகரித்து சண்டை ஏற்பட்டது.சண்டையின் போது பாபுலாலை அவரது மனைவி தரக்குறைவாக பேசியதால் மனமுடைந்த பாபுலால், தனது 3 குழந்தைகளையும் வெளியே அழைத்து செல்வதாக பொய் சொல்லிவிட்டு பிள்ளைகளுடன் வெளியே புறப்பட்டு சென்றார்.

வெளியே வந்த பாபுலால், முதலில் அவரது பிள்ளைகளான மணிஷா(4), அனாமிகா(2), மணிஷ்(1) ஆகியோரின் கழுத்தை நெரித்துக் கொன்றார்.பின்னர் அவ்வழியாக வந்த பேருந்தின் முன் பாய்ந்த பாபுலால், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

4 பேரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Top