புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த ஒருவர் வளர்த்து வந்த பந்தயப் புறா 4 லட்சம் டாலர்களுக்கு விலை போய் ஒரு புதிய உலக சாதனை படைத்துள்ளது.


பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லியோ ஹெரேமேன்ஸ்(66) என்பவர் ஒரு பந்தயப் புறாவை வளர்த்து அதற்கு தீவிரப் பயிற்சி அளித்து வந்தார். ஓட்டப்பந்தயத்தில் உலக சாதனை படைத்த ஜமைக்கா நாட்டு வீரர் உசைன் போல்ட்டின் நினைவாக வளர்ப்பு புறாவுக்கு அவர் போல்ட் என்று பெயரிட்டார்.

பெல்ஜியத்தில் உள்ள 'புறாக்கள் சொர்க்கம்' ஏல நிறுவனத்தில் இந்த புறா ஏலம் விடப்பட்டது. சீனாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் போல்ட்டை 4 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு ஏலத்தில் எடுத்தார்.

ஒரு பந்தயப் புறா 4 லட்சம் டாலர்களுக்கு விலை போனது உலக சாதனையாக கருதப்படுகிறது.

இதேபோல் தனது மாடங்களில் உள்ள சுமார் 530 புறக்களையும் அவர் ஏலம் விட்டார். போல்ட் உட்பட எல்லா புறாக்களும் 56 லட்சம் அமெரிக்க டாலர்களை லியோ ஹெரெமேன்சுக்கு பெற்றுத் தந்துள்ளது.

இதுவும் ஒரு புதிய உலக சாதனையாக கருதப்படுகிறது.

போல்ட்டை ஏலத்தில் எடுத்த சீன தொழிலதிபர், இதே போல் பல பந்தயப் புறாக்களை உருவாக்கும் நோக்கில் போல்ட்டை இனப் பெருக்கத்திற்கு பயன்படுத்த உள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில் இதுபோன்று நடத்தப்பட்ட பந்தய புறா ஏலத்தில் ஒரு புறா 24,147 அமெரிக்க டாலர்களுக்கு சீனவை சேர்ந்த ஒருவரால் ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


 
Top