புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மகன்களை சினிமாவுக்கு கொண்டு வரும் ஆர்வத்தில் நூற்றில் ஒரு பங்கை மகள்கள் விஷயத்தில் எந்த சினிமா தந்தையும் காட்டுவதில்லை.
அப்படியே மகள் சினிமாவுக்கு வந்தாலும் ர‌ஜினி மாதி‌ரி திரைக்குப் பின்னால் இருந்துக்கோ என்றுதான் அறிவுரை தருகிறார்கள். விதிவிலக்கு கமல், அர்ஜுன்.

மூத்த மகள் ஐஸ்வர்யாவின் ஆசைக்கு ம‌ரியாதை தந்து பட்டத்து யானையில் விஷாலுக்கு ஜோடியாக அவரை நடிக்க வைத்திருக்கிறார். அப்பா எனக்கு எல்லையில்லா சுதந்திரம் தந்திருக்கிறார் என ஐஸ்வர்யாவும் பேட்டிகளில் தெ‌ரிவித்துள்ளார். முத்தக் காட்சியில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்தான் இந்த எல்லையில்லா சுதந்திரம் மேட்டர்.

ஐஸ்வர்யாவுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் துணைக்கு வருகிறவர் அவரது தங்கை அஞ்சனா. அரை டவுசருடன் எப்போதும் அக்காவுடன் அஞ்சனாவையும் பார்க்க முடிகிறது. பள்ளி படிப்பில் இருக்கும் அஞ்சனா இன்னும் ஓ‌ரிரு வருடங்களில் அக்காவுக்கு போட்டியாக நடிக்க வந்துவிடுவார். அவருக்கு ஆசை இல்லாவிட்டாலும் அதனை உருவாக்குவதில் நம்மூர் இயக்குனர்கள் கில்லாடிகள்.

மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதில்லை என்பதுதானே சினிமா திய‌ரி



 
Top