புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

கனடாவிலுள்ள டொரண்டோ பகுதியில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவரை மூன்று சகோதரர்கள் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

டொரண்டோவின் Richmond Street and Spadina Avenue பகுதியில் உள்ள இரவு விடுதியில் 22 வயது இளம்பெண் ஒருவர் தனது தோழிகளுடன் வந்துள்ளார். அப்போது அவருடன் 26 வயது இளைஞர் ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசிக்கொண்டிருந்தார்.

பின்னர் அந்த பெண், தன் தோழிகளுடன் வெளியே வந்தபோது, அந்த வாலிபர் மேலும் இரண்டு நபர்களோடு அவர்களை பின் தொடர்ந்துள்ளார். பின்னர் திடீரென அந்த பெண்ணை மூவரும் சேர்ந்து தூக்கிக் கொண்டு மறைவான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இரவு நேர இருட்டில் அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதை உடன் வந்த தோழிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை. தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த பொலிசார், தோழிகளுடன் சேர்ந்து அந்த பெண்ணை முதலில் கண்டுபிடித்தனர்.

மூன்று நபர்களால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அந்த பெண் கண்ணீருடன் புகார் அளித்தார். அந்த பெண் கூறிய அடையாளங்களை வைத்து பொலிசார் குற்றவாளிகள் மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மூவரும் சகோதரர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்களால் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் கருதுகின்றனர்.
 
Top