புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

மேற்குலக நாடுகளில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறுவது வழமை என்றாலும் இது கொஞ்சம் ஓவராகத் தான் உள்ளது.அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் உள்ள கடைகளுக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை பெண் ஒருவர் பிறந்த மேனியாக நடமாடியமையால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

பெண்ணின் பெயர் Barbara Lefleur. வயது 49. அன்று இவருக்கு பிறந்த தினம். சுதந்திரமாக நடமாடுகின்ற உரிமையை முன்னிறுத்தி பிறந்த மேனியாக திரிந்து இருக்கின்றார். இதனால் கடைகளுக்கு வந்திருந்த வாடிக்கையாளர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். ஆயினும் பெண் சாதாரணமாகவே நடந்து கொண்டார்.

பொலிஸார் தகவல் அறிந்து வந்து கைது மேற்கொண்டனர். அப்போது இவர் ஆடைகளுடன் காணப்பட்டார். ஆயினும் இவர் நிர்வாணமாக நடமாடி திரிந்த காட்சிகள் பாதுகாப்புக் கமராவில் பதிவாகி உள்ளன.
பொலிஸார் இவருக்கு எதிராக வழக்கு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்கள். இவர் மன நோயாளி அல்லர் என்று மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

பொது இடத்தில் தகாத முறையில் நடந்து கொண்டமைக்காக இவருக்கு 90 நாட்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top