புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


பட்டம் ஏற்றிக் கொண்டிருந்த  சிறுவன் ஒருவன் பட்டம் இழுத்துச் சென்றதால் கீழே விழுந்து படுகாயமடைந்தான். இந்தச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் பருத்தித்துறையில் இடம்பெற்றது.
பருத்தித்துறைப் பகுதியைச் சேர்ந்த பி.விஷ்ணுகாந் (வயது14) என்ற சிறுவனே
படுகாயமடைந்தவராவார்.

பருத்தித்துறைப் பகுதியில் பாரம்பரியமாக ஆளளவுப் பட்டம் கட்டிப் பறக்கவிடுவது வழமை.

நேற்று இவ்வாறு தனது நண்பர்களுடன் பட்டம் பறக்கவிட்டுக்கொண்டிருந்த இந்தச் சிறுவனை பட்டம் இழுத்துச் சென்றது.

பதற்றமடைந்த சிறுவன் தவறி நிலத்தில் விழுந்து படுகாயமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறுவன் தற்போது கால்முறிந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top