ஒரு காலத்தில் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த வைத்திருந்தவர் மைக் மோகன். இவர் மைக்கைத் தொட்டு விட்டால்
அந்த படமும் பாடல்களும் ஹிட்டாகி விடும் என்பது நம்பிக்கையாக இருந்தது. அதோடு ஏராளமான பெண் ரசிகைகளையும் சம்பாதித்து வைத்திருந்தார்
மோகன். ஆனால் அவர் நடித்த விதி படம்தான் அவரது பாசிட்டிவ் இமேஜை மாற்றி நெகடீவ் இமேஜை உருவாக்கி விட்டது. ஒரு பெண்ணை கற்பழித்து
விட்டு ஏமாற்றும் வேடத்தில் நடித்தால் அதன்பிறகு மோகனை ரசிகைகள் தூக்கி எறிந்தனர். இதனால் படிப்படியாக அவரது மார்க்கெட்டும் சறுக்கி விழுந்தது.
அதனால் பல வருடங்களாக சினிமாவுக்கு வெளியே இருந்த மோகன், நீண்ட இடைவேளைக்குப்பிறகு அன்புள்ள காதலுக்கு என்றொரு படத்தை தானே
இயக்கி நடித்தார். அதுவும் எடுபடவில்லை. இந்த நிலையில், சமீபகாலமாக சில சினிமா விழாக்களுக்கு வரத் தொடங்கியுள்ள மோகன், அங்கு கண்ணில்
தென்படும் இயக்குனர்களிடம் நடிக்க சான்ஸ் கேட்டு வருகிறார். அப்படி அவர் பிரியாணி படத்தை இயக்கும் வெங்கட்பிரபுவை அணுகி சான்ஸ் கேட்டபோது,
ஒரு யூத்தான கேரக்டர் உள்ளது. அதில் சண்டையெல்லாம் போட வேண்டும். ஆனால் உங்களது உடம்பு இப்போது இருக்கிற நிலையில் சண்டைக்கெல்லாம்
தாங்க மாட்டீர்கள். அதனால் அடுத்த படத்தில் உங்கள் வயசுக்கேற்ற சாப்ட்டான வேடம் இருந்தால் சொல்கிறேன் என்று கூறி விட்டாராம். இதனால்,
எனக்கென்ன அவ்ளோ வயசாகி விட்டது. விட்டால் என்னை தாத்தா வேடத்தில் நடிக்க சொல்வார்கள் போலிருக்கே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் மைக்மோகன்.
0 கருத்து:
கருத்துரையிடுக